பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் பள்ளிவாசலை எரிக்க முயற்சி!

பரிஸ் 18ல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்திற்கு
இஸ்லாமிய பள்ளி வாசல் ஒன்றை தீவைத்து எரிக்க முற்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை Saint-Martin-des-Champs (Finistère) நகரில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது நபர் ஒருவர் பள்ளிவாசலின் கதவை தீயிட்டு எரிக்க முற்பட்டுள்ளார்.


ஆனால் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறும் முன்னர் காவல்துறையினர் தலையிட்டு, குறித்த நபரைக் கைது செய்தனர். பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Back to top button