தாயகம்

கொழும்பில் மரணித்து உயிர்த்தெழுந்த நபர்! வெளியான முக்கிய தகவல்!

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் மரணித்து உயிர்த்தெழுந்த நபர் என தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து இன்றையதினம் (15-01-2024) கைது செய்யப்பட்ட அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

மேலும், பௌத்த போதனைகளுக்கு முரணாக மதசார்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மஹிந்த கொடிதுவக்கு என்ற அவலோகிதேஸ்வர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார்.

Back to top button