தாயகம்

விடுதலைப்புலிகளின் புதையல்! சுற்றிவளைத்த பொலிசார்!

தமிழர் பகுதியில் அனுமதி பத்திரமின்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனர் இயந்திரத்துடன் வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் , வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். புதைக்கப்பட்டதாக கூறப்படும் பொக்கிஷங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பொக்கிஷங்கள் மற்றும் தங்கத்தை தேடும் குழுவினர் தொடர்பில் வவுனியா பொலிஸ் விஷேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைதாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நவீன ஸ்கேனர், கார் மற்றும் வான் ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கைதான சந்தேகநபர்கள் சுங்க வரியை மோசடி செய்து ஜேர்மனியில் இருந்து இரகசியமாக இந்த நவீன ஸ்கேனரை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Back to top button