தாயகம்

இலங்கையில் பயங்கரம்! கணவர் அரங்கேற்றிய கொடூரம்!

தென்னிலங்கையில் குடும்பதகராறில் கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ர்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமபவம் அலபாத்த, நிரியெல்ல நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.


கணவன் மகைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். 43 வயதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Back to top button