பிரான்ஸ் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்! மிரட்டல் விடும் ரஷ்யா!
கருங்கடலில் ரோந்து செல்லும் தங்கள் விமானங்களை சுட்டு வீழ்த்திவிடுவதாக ரஷ்யா மிரட்டுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. பிரான்ஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான Sébastien Lecornu, கருங்கடலில் ரோந்து செல்லும் தங்கள் விமானங்களை சுட்டு வீழ்த்திவிடுவதாக ரஷ்யா மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், கடந்த மாதம் கருங்கடலில் எங்கள் விமானம் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, ரஷ்ய விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து எங்கள் விமானத்தை சுட்டு வீழ்த்திவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்றார் Sébastien.
இத்தனைக்கும், எங்கள் விமானம், சர்வதேச வான்வெளியில்தான் பறந்துகொண்டிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவின் போக்கு மாறிவிட்டது, 2022க்கு முன் அந்நாடு நடந்துகொண்ட விதத்துக்கும் 2024இல் அது நடந்துகொள்ளும் விதத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறும் Sébastien, ரஷ்யாவின் முரட்டுப் போக்கு, அது உக்ரைன் போரில் இழப்பை சந்தித்துக்கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது என்கிறார்.