தாயகம்

யாழில் பயங்கரம்! சகோதரர்கள் மருத்துவமனையில்!

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தி இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (22) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பொலிசார் விசாரணை
காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடே வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button