தாயகம்

கொழும்பில் பரபரப்பு! 19 இளைஞர்களுடன் 8 யுவதிகள் அதிரடி கைது!

விருந்துபசாரத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 19 இளைஞர்களையும், 08 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு – கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட இந்த குழுவினரை சுற்றிவளைப்பின் போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அங்கு சந்தேகநபர்கள் 3 பேரிடம் இருந்து ஹாஷிஸ் போதைப்பொருளும், மேலும் மூன்று சந்தேக நபர்களிடம் போதை மாத்திரைகளும் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 20 மற்றும் 22 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, காலி, கண்டி மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button