பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் பாசத்தால் உயிரிழந்த மகன்!

Fontenay-sous-Bois (Val-de-Marne) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து தாய்-மகன் ஆகிய இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜனவரி 9, செவ்வாய்க்கிழமை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். 80 வயதுடைய பெண் ஒருவரும், அவருடைய 60 வயதுடைய மகன் ஆகிய இருவரும் இறந்து கிடந்த நிலையில் இரு சடலங்களையும் காவல்துறையினர் மீட்டனர். அவர்கள் உயிரிழந்து குறைந்தது மூன்று வாரங்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில் மேலும் தெரியவருவதாவது, 80 வயதுப் பெண் குறித்த வீட்டில் தனியே வசித்த நிலையில், அவர் தொடர்பில் சில நாட்களாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், அவரது மகன் அங்கு வருகை தந்துள்ளார்.
அங்கு அவரது தாய் உயிரிழந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் விரக்தியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button