பிரான்ஸ்

பிரான்ஸில் பதுங்கிய கொலையாளிகள்! பொறி வைத்து பிடித்த காவல்துறை!

ஜேர்மனியில் கொலை ஒன்றை செய்துவிட்டு பரிசில் பதுங்கி தலைமறைவாக வாழ்ந்த மூவர் கொண்ட குழுவை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நேற்று மார்ச் 23 சனிக்கிழமை நள்ளிரவு இக்கைது சம்பவம் பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றது. Metz (Moselle) நகர காவல்துறையினர் பரிஸ் காவல்துறையினரை தொடர்புகொண்டு, ‘ சிரியாவைச் சேர்ந்த மூன்று கொலைக்காரர்கள் பரிசின் Gare de l’Est நிலையத்துக்கு வந்தடைந்துள்ளதாகவும், அவர்களை கைது செய்யும் படியும் அறிவிக்கப்பட்டது.

பின்னர் விரைவான நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், குறித்த தொடருந்து நிலையத்தை கண்காணித்தனர். மூவரும் தொடருந்து நிலையத்தை விட்டு வெளியேறி rue d’Alsace வீதியில் உள்ள Le Lorraine எனும் விடுதிக்குச் சென்றதை உறுதி செய்தனர்.

பின்னர், விடுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர், அதிரடியாக உள் நுழைந்து இரவு 11.55 மணி அளவில் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் இரு நாட்களுக்கு முன்னதாக ஜேர்மனியில் வைத்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூவரும் விரைவில் ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.

Back to top button