பிரான்ஸ்

பிரான்ஸில் கட்டிடம் ஒன்றில் அட்டகாசம் செய்த நபர்!

கட்டிடம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த வாகனங்களைச் சேதமாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Claye-Souilly (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் மார்ச் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

37 வயதுடைய ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.50 மணி அளவில் அங்குள்ள தனியார் கட்டிடத்தொகுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார். கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு நுழைந்த அவர், அங்கிருந்த மகிழுந்துகள் பலவற்றை சேதப்படுத்தியுள்ளார்.

மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாள் போன்ற ஒரு ஆயுதத்தினால் மகிழுந்துகளில் சேதமேற்படுத்தியுள்ளார். பின்னர் குறித்த நபர் சில நிமிடங்களிலேயே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Back to top button