பிரான்ஸ்

பிரான்ஸின் பிரபல நடிகர் வீட்டில் சோதனையிட்ட பொலிசார்! காத்திருந்த அதிர்ச்சி!

பிரபல பிரெஞ்சு நடிகர் ஒருவர் வீட்டை சோதனையிட்ட பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மத்திய பிரான்சிலுள்ள Douchy-Montcorbon என்னுமிடத்தில் வாழ்ந்துவருபவர், திரைத்துறையில் ஜாம்பவான் என அழைக்கப்படும் பிரபல பிரெஞ்சு நடிகர் Alain Delon (88). சமீபத்தில் Alain வீட்டுக்கு அனுப்பப்பட்ட நீதிமன்ற அலுவலர் ஒருவர், Alain வீட்டில் துப்பாக்கி ஒன்று இருப்பதைக் கண்டு நீதிபதி ஒருவருக்கு தகவலளித்தார்.

அதைத் தொடர்ந்து, அவரது வீட்டை சோதனையிட உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று பொலிஸ் அதிகாரிகள் Alain வீட்டை சோதனையிட்டார்கள். பொலிசார் சோதனையில், Alain வீட்டில் ஒன்று இரண்டல்ல, 72 துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது.

அத்துடன், கூடவே 3,000 துப்பாக்கிக்குண்டுகளும் Alain வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
இன்னொரு விடயம் என்னவென்றால், ஒரு துப்பாக்கி வைத்திருக்கக்கூட Alain உரிமம் எதுவும் பெறவில்லை என்பதுதான்.

Back to top button