பிரான்ஸ்

பிரான்ஸில் தொடரூந்தை தாமதப்படுத்தியவருக்கு சிறை!

#france news#

RER C தொடருந்தினை மூன்று தடவை தாமதப்படுத்திய ஒருவருக்கு சிறை!
RER C தொடருந்தினை மூன்று தடவை தாமதப்படுத்திய ஒருவருக்கு சிறை!
நேற்று திங்கட்கிழமை காலை 18 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு Essonne மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஒருவருட சிறைத்தண்டனை விதித்தது.
குறித்த நபர் RER C தொடருந்து ஒன்றில் பயணிக்கும் போது போதிய காரணம் இல்லாமல் மூன்று முறை அதன் அவசர சமிக்ஞையை இழுத்து தொடருந்தினை நிறுத்தியுள்ளார்.

இதுபோன்று மூன்று தடவைகள் அவர் இதே போன்று இழுந்து, மூன்று தடவைகள் தொடருந்தை நிறுத்தி, போக்குவரத்தை தாமதப்படுத்திய குற்றத்துக்காகவே சிறையில் அடைக்கப்பட்டார். மார்ச் 6 ஆம் திகதி புதகிழமை இச்சம்பவம் Saint-Chéron தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இரவு 8.30 மணி அளவில் தொடருந்து நிறுத்தப்பட, இரண்டுமணிநேரங்கள் சேவை தடைப்பட்டது. 430 பயணிகள் Saint-Chéron (Essonne) தொடருந்து நிலையத்தில் காத்திருக்க நேர்ந்தது. அதையடுத்தே தொடருந்தை நிறுத்த முற்பட்ட மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 2,700 யூரோக்கள் குற்றப்பணமும், பன்னிரெண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

Back to top button