உலகம்

புகலிடகோரிக்கையாளர்களுக்கு ரகசிய அடைக்கலம்! பெரும் தொகை பணம் வசூல்!

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக தங்கும் வசதிகள் அளித்து, ஆண்டுக்கு பெருந்தொகை சம்பாதித்து வந்த ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
சட்டவிரோத திட்டம் அம்பலம்
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் குயின்ஸ் பகுதியில் Ebou Sarr என்ற 47 வயது நபரே ரகசியமாக 87 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு தங்கும் வசதிகளை ஏற்படுத்தி பெருந்தொகை சம்பாதித்தவர். திங்களன்று இவரது சட்டவிரோத திட்டம் அம்பலமான நிலையில், Bronx பகுதியில் இன்னொரு 60 புகலிடக்கோரிக்கையாளர்களை இவர் ரகசியமாக தங்க வைத்திருந்தது புதன்கிழமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிழக்கு கிங்ஸ்பிரிட்ஜ் சாலையில் மூடப்பட்டுள்ள கடை ஒன்றின் தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் 45 படுக்கைகளை கண்டெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த புலம்பெயர் மக்கள் நகர நிர்வாகம் நடத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் தெருவுகளில் வசிக்கவே முடிவு செய்து அதிகாரிகளுடன் செல்ல மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் Ebou Sarr தெரிவிக்கையில், ஒவ்வொரு புலம்பெயர் நபர்களிடம் விசாரித்தாலும், அவர்கள் நகர நிர்வாகத்தின் முகாமில் செல்ல விரும்பவில்லை என்றே கூறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
உணவும் தங்கும் வசதியும்
பல ஆண்டுகளுக்கு முன்னர் செனகல் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய அகதியான Ebou Sarr, இதுபோன்ற ஒரு தங்கும் அமைப்பை உருவாக்க தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மாதம் 300 டொலர் கட்டணமாக வசூலிக்கும் இவர் உணவும் தங்கும் வசதியும் அளிக்கிறார். மாதம் 26,100 டொலர் அல்லது ஆண்டுக்கு 313,000 டொலர் சம்பாதிக்கிறார்.
குயின்ஸ் பகுதியில் இருந்து 311 இலக்கத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், பொலிசார் ஆய்வு முன்னெடுத்ததை அடுத்தே அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பல எண்ணிக்கையிலான e-bike அந்த கட்டிடத்திற்கு அருகாமையில் காணப்பட, சந்தேகத்தின் அடிப்படையில் 311 இலக்கத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இரு சட்டவிரோத முகாம்களில் தங்கியிருந்த பெரும்பாலானோர் செனகல் நாட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.

Back to top button