பிரான்ஸ்
🇫🇷பிரான்ஸில் பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி!
Carrières-sous-Poissy (Yvelines) பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். பெப்ரவரி 12 ஆம் திகதி மாலை 6.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய பெண் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு பின்னால் சென்று அவரை கட்டியணைத்து கீழே விழுத்திய நபர் ஒருவர், அவரை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட 26 வயதுடைய குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பெண் காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்துள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.