🇨🇦கனடாவில் ஈழத் தமிழ் யுவதிக்கு நிகழ்ந்த கொடுமை!
கனடாவில் வசிக்கும் 34 வயதான முல்லைத்தீவு இளைஞர் தமக்கு பாலியல் தொல்லை தருவதாக , மனைவி பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கனடா சென்ற வவுனியாவை சேர்ந்த யுவதியே இவ்வாறு பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கசந்த திருமண வாழ்க்கை
தன்னை கடுமையான முறையில் இயற்கைக்கு புறம்பாக கணவன் பாலியல் சித்திரவதை செய்வதாக தெரிவித்து மனைவி பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் கனடா வாழ் முல்லைத்தீவு இளைஞருக்கும் வவுனியாவை சேர்ந்த யுவதிக்கும் இலங்கையில் திருமணம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் இவ்வருட நடுப்பகுதியில் இளம் பெண்ணான வவுனியாவை சேர்ந்த யுவதி கனடாக்கு சென்றுள்ளார்.
இந்லையில் கணவன் , பாலியல் சித்திரவதை செய்வதாக தெரிவித்து மனைவி பொலிசாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. அதோடு தான் தற்போது கர்ப்பிணியாக உள்ளதாகவும், தனக்கு கணவனைத் தவிர யாரையும் கனடாவில் தெரியாது என பெண் பொலிசாரிடம் முறையிட்டுள்ள வவுனியா யுவதி, கணவனிடமிருந்து தன்னைப் பாதுகாக்குமாறும் போலிஸாரிடம் உதவி கோரியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.