பிரான்ஸில் பாரிய கொள்ளை சம்பவம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
மகிழுந்து ஒன்றுக்குள் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட €180,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
Avenue des Champs-Élysées இக்கு அருகே உள்ள rue François வீதியில் Lamborghini Urus மகிழுந்து ஒன்றை நிறுத்திவிட்டு இரு நபர்கள் அருகில் இருக்கும் கடை ஒன்றுக்கு நடந்து சென்றுள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இரு கொள்ளையர்கள் மகிழுந்துக்குள் ஏதேனும் கிடைக்குமா என துலாவியுள்ளனர்.
அதன்போது அவர்களுக்கு அதிஷ்ட்ட அடித்தது போன்று ஆடம்பர நகைகள் இருக்கும் பெட்டி ஒன்றை கண்டனர். €180,000 பெறுமதியுள்ள அனைத்து நகைகளையும் கொள்ளையிட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.
குறித்த Lamborghini மகிழுந்தை இருவரும் வாடகைக்கு பெற்றுக்கொண்டு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.