பிரான்ஸ்
🇫🇷இல் து பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!
இல் து பிரான்சுக்குள் நாளை வெள்ளிக்கிழமை வளிமாசடைவு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளது. வளிமண்டலத்தில் பலத்த மாசடைவு ஏற்பட்டுள்ளதாகவும், எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் கடும் குளிர் காரணமாக அதிகளவு வெப்பமூட்டிகள் பயன்படுத்தப்படுவதால் இந்த வளிமண்டல மாசடைவு ஏற்பட்டுள்ளதாக Airparif நிறுவனம் தெரிவித்துள்ளது.