வெளிநாட்டு வேலைவாய்ப்பு! பாரிய மோசடி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபா பண மோடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணாவார். ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 250க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 100 கோடி ரூபா பணத்தை மோசடி செய்து அநுராதபுரம் , புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
180 முறைப்பாடுகள் இவருக்கு எதிராக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சந்தேக நபருக்கு எதிராக மஹர நீதிவான் நீதிமன்றத்தில் 36 பிடியாணைகளும் கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் 11 பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் , தலைமறைவாகி இருந்த காரணத்தினால் அவரை கைது செய்ய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர் நீர்கொழும்பு – சிலாபம் வீதியில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகி மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேகநபர் கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.