தாயகம்

யாழில் எய்ட்ஸ் தொற்று! ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் எய்ட்ஸ் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் (2023) எய்ட்ஸ் தொற்றுக் காரணமாக யாழ் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஐந்து பேர் எய்ட்ஸ் தொற்றாளர்களாகக் கடந்த வருடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்த நோயின் தாக்கம் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Back to top button