பிரான்ஸ்

பிரான்ஸ் யூத தலங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு! உள்துறை அமைச்சரின் அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து யூத வழிபாட்டுத் தலங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பினை மேற்கொள்ள உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், பிரான்சில் யூத மத தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. அதையடுத்து, யூத வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு கண்காணிப்பு இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உளவுத்துறை மிக தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காஸாவில் உணவு விநியோகம் ஒன்றின் போது ஏற்பட்ட கலவரத்தில் 115 பேர் பலியாகியிருந்தனர்.

800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button