தமிழர் பகுதியில் இன்று நிகழ்ந்த பயங்கர சம்பவம்! பரிதாபமாக பலியான ஒருவர்!
மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (16-01-2024) பிற்பகல் களுவாஞ்சிகுடி – குருக்கள்மடத்தில் இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிகுடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொறியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது, முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்துக்கான காரணமான லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.