தாயகம்

இலங்கையில் கோர விபத்து! வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பம் காயம்!

தம்புள்ளை ஹபரன பிரதான வீதியின் பல்வெஹெர பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு குடும்பம் ஒன்று படுகாயமடைந்துள்ளது.
பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்துக்குள்ளான காரில் பயணித்த ஒரே குடும்பதை சேர்ந்த தாய், தந்தை, மகன், காரின் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பிக்குனி ஆகியோர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Back to top button