பிரான்ஸ்
🇫🇷பிரான்ஸில் நிறுத்தப்படும் முக்கிய சேவை!
வீடுகளுக்கு இணைய சேவைகளை வழங்கும் ADSL சேவையினை Orange நிறுவனம் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பழமையான இந்த இணைய சேவையினால், மிக குறைந்த வேகத்துடனான இணையமே வழங்க முடிகிறது. பயனாளர்கள் பலரும் இந்த சேவைகளில் இருந்து ‘கம்பி தொடபுகளற்ற சேவைகளிலும், fibre போன்ற அதிவேகமான இணைய சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதையடுத்து, பகுதி பகுதியாக இந்த ADSL சேவையினை நிறுத்த ஆரம்பிக்க உள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டுக்குள் முற்றாக இச்சேவைகளை நிறுத்தி அதற்கு பதிலாக fibre சேவைகளை வழங்க உள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இறுதியிலேயே 80% சதவீதமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள சேவைகளையே இந்த காலப்பகுதிகளில் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.