பிரான்ஸ்

ஈபிள் கோபுரத்தின் கட்டணம் அதிகரிப்பு!

ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. பரிசில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களின் நுழைவுக் கட்டணங்கள் அண்மையில் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணமும் அதிகரிப்புக்கு உள்ளாகிறது.

20% சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. புதிய கட்டணமாக €31 யூரோக்கள் அறவிடப்பட உள்ளது. புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் துல்லியமான திகதி அறிவிக்கப்படவில்லை என்றபோதும், இவ்வருடத்தின் கோடைகாலத்தில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஈஃபிள் கோபுரம் மிகச்சிறந்த பராமரிப்பில் உள்ளதாகவும், விரைவில் வர்ணம் பூசப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Back to top button