பிரான்ஸ்

பிரான்ஸ் முக்கிய கருத்துக்கணிப்பு! ஜனாதிபதியின் நிலை என்ன?

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் கேப்ரியல் அத்தால் ஆகியோரின் பிரபலத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி மக்ரோன் தற்போது 32 புள்ளிகள் பிரபலத்தன்மையுடன் உள்ளார். சென்ற ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது -2 புள்ளிகள் வீழ்ச்சியாகும். அதேவேளை, பிரதமர் அத்தால் 47 புள்ளிகள் பிரபலத்தன்மையுடன் உள்ளார்.

சென்ற ஜனவரி மாத இறுதியுடன் ஒப்பிடுகையில் -4 புள்ளிகள் வீழ்ச்சியாகும். மேற்படி ஆய்வினை Ifop-Fiducial நிறுவனம் Paris Match மற்றும் Sud Radio ஆகிய ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தது.

Back to top button