🇫🇷பிரான்ஸில் படுகாயமடைந்த காவல்துறையினர்!
நேற்று இரவு 22h30 மணியளவில் லியோன் நகரிற்கு அண்மித்த நகரமான Villeurbanne இல் காவற்துறையினர் திருடப்பட்ட சிற்றுந்து ஒன்றை நிறுத்த எத்தனித்துள்ளனர். திருடப்பட்ட வாகனச் சாரதி, காவற்துறையினரின் கட்டளைக்கு இணங்க மறுதலித்து, காவற்துறையினரின் இரண்டு சிற்றுந்துகளை மோதியெறிந்துள்ளான்.
இதில் எட்டுக் காவற்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.
மூவர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருடப்பட்ட சிற்றுந்தைத் துரத்திச் சென்ற காவற்துறையினர் மீது கடுமையான வன்முறைத் தாக்குதல் நடந்துள்ளது என காவற்துறையினரின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மோதப்பட்ட வாகனங்களின் படங்களை X சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து எத்தகைய வன்முறை காவற்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் காவற்துறையின் சிறப்பு பிரிவான UPS EST பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.