பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் ஆயுதமுனையில் கொள்ளை!

Val-de-Marne மாவட்டத்தின் முன்பாக நின்றிருந்த பணம் எடுத்துச் செல்லும் கவச வாகனம் ஒன்றை ஆயுதமுனையில் கொள்ளையிடும் முயற்சி ஒன்று இன்று காலை இடம்பெற்றது. Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இன்று ஜனவரி 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. Avenue Maurice-Thorez வீதியில் உள்ள BCP வங்கியின் முன்பாக நின்றிருந்த கவச வாகனம் ஒன்றை, ஆயுததாரிகள் சிலர் காலை 6 மணி அளவில் சுற்றிவளைத்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து, அவசர கால சமிக்ஞை ஒலி எழுப்பட்டு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
காவல்துறையினர் வருவதை அறிந்த கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது.

Back to top button