தாயகம்

யாழில் ஆட்டம் காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள்! கையும் களவுமாக சிக்கிய இருவர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு உபகாவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நகரப்பகுதியைச் சேர்ந்த அவர்கள், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மாலை 6 மணிமுதல் இரவு 9 வரையான நேரத்துக்குள் வீதியில் பயணித்தவர்களை இலக்குவைத்து நீண்டகாலமாக வழிப்பறியில் ஈடுபட்டுவந்துள்ளமை முதல்கட்ட விசாரணையின் தெரியவந்துள்ளது.
கைதானவர்கள் பிரதான சந்தேகநபர்கள் என்பதுடன் அவர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இருவரும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேகநபர்கள் பலரிடம் சிறியதொகைகளைப் பறித்தெடுத்துள்ளனர்.

ஆனால், சிறியதொகைதானே என்பதால், அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய பலரும் முன்வரவில்லை. இவ்வாறான அசண்டையீனத்துடன் இருக்கவேண்டாம் என்றும், சிறிய தொகையாயினும் குற்றச்செயல் தொடர்பில் காவல்துறை முறைப்பாடு பதியப்பட வேண்டும் என்றும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Back to top button