பிரான்ஸ்

🇫🇷இல் து பிரான்ஸிற்குள் இன்று முதல் கடும் பனிப்பொழிவு!

ஜனவரி 16, இன்று செவ்வாய்க்கிழமை இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதிலும் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இன்று இரவு ஆரம்பமாகும் பனிப்பொழிவு நாளை புதன்கிழமையும் தொடர்கிறது. கிட்டத்தட்ட 70% சதவீதமான இல் து பிரான்ஸ் நிலப்பகுதி முழுவதிலும் பனிக்கொட்டும் எனவும், வீதிகள் முழுவதும் பனி நிறைந்து போகுவரத்து பாதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-4°C சில பகுதிகளில் குளிர் நிலவும் எனவும், N118, A12 மற்றும் A13 வீதிகளில் அதிக பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை அதிகபட்சமாக 5 செ.மீ உயரம் வரை பனிப்பொழிவு இடம்பெறும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

Back to top button