பிரான்ஸ்

பிரான்ஸில் போலித் தகவல்! கண்டனம் வெளியிட்ட மக்ரோன்!

முதல்பெண்மணி பிரிஜித் மக்ரோன் தொடர்பாக இணையத்தளங்களில் பரவி வரும் போலியான செய்திகளுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


பிரிஜித் மக்ரோன் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை பெண்மணி என இணையத்தளங்களில், சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவியவண்ணம் உள்ளன. அதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டித்துள்ளார்.

நாட்டின் முதல் பெண்மணி மீது அவதூறு பரப்புவதாகவும், ”இது மிகவும் மோசமான விடயம். அதை நம்பும் நபர்கள் தங்களது தனியுரிமையில் இருந்து வெளியே தள்ளப்படுகின்றீர்கள்” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வதந்தி கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து பகிரப்பட்டு வருகிறது எனவும், பிரிஜித் முன்னதாக Jean-Michel என அழைக்கப்பட்ட ஆண் எனவும், தற்போதே அவர் பெண் வடிவம் எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது

Back to top button