பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் பின்னடைவை நோக்கி பேரூந்து சேவை!

கடந்த 20 ஆண்டுகள் இல்லாதிருந்து மீண்டும் 10ம் திகதி டிசம்பர் 2023 அன்று போக்குவரத்து அமைச்சர் Clément Beaune அவர்களால் பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பித்த வைக்கப்பட்ட Paris-Aurillac, Paris-Berlin இரவு நேர தொடருந்து சேவைகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது.


காரணம் குறித்த இரவு நேர நீண்ட தூரப் பயணத்தில் பல நகரங்களை இணைக்கும் பாதைகள், இன்னமும் முறையாக மின்சார மயமாக்கப்பட இல்லை என தெரியவருகிறது குறிப்பாக. Brive-la-Gaillarde நகருக்கு Corrèze மற்றும் Aurillac நகரங்களுக்கும் இடையில் எரிபொருள் மூலமே தொடருந்து இயங்கவேண்டியுள்ளது.
மின்சாரத்திலும், எரிபொருளிலும் இயங்கவேண்டிய தொடருந்து இயந்திரங்கள் வலுவாக இல்லாத காரணத்தால் குறித்த இடங்களில் இயந்திரங்கள் பழுதடைந்து சேவைகள் தடைப்படுகின்றன.

இதனால் பயணிகள் இரவு நேரத்தில் பெரும் அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.
சரியான தொழில்நுட்ப ஏற்பாடுகள் இல்லாமல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த நீண்டதூர பயணங்களை மக்கள் மெல்ல மெல்ல தவிர்த்து வருவது SNCF இரவு நேர தொடருந்து சேவைகள் பின்னடைவை சந்திக்கின்றது என தெரியவந்துள்ளது.

Back to top button