உலகம்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான புதிய தகவல்கள்!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் கடந்த வாரம் துப்பாக்கியால் சூட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் கனடாவுக்கு வந்ததன் பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் (09-03-2024)பர்ஹாவன் பிரதேசவாசிகளால் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 06-03-2023 இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான Barrhaven என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் துப்பாக்கியால் சூட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பத்தின் நினைவேந்தல் நிகழ்வு தனுஷ்கவின் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் உள்ளூர்வாசிகள், மகா சங்கரத்ன, இரு நாட்டு அரசு அதிகாரிகள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இதற்கிடையில், தனுஷ்க விக்ரமசிங்கவின் குடும்பத்தின் நண்பர்கள் கொலைச் சம்பவம் தொடர்பாக அனுதாபத்தை வெளிப்படுத்தியதுடன் பல கனேடியர்களும் இது குறித்து கவலை வெளியிட்டுள்ளார். தாக்குதலில் உயிர் பிழைத்து பலத்த காயங்களுக்கு உள்ளான தனுஷ்க விக்ரமசிங்க தற்போது இரண்டு சத்திர சிகிச்சைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விக்ரமசிங்கவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முடித்த பின்னர் அவரை கவனித்துக் கொள்வதாகவும் ஒட்டாவிலுள்ள ஹில்டா ஜயவர்த்தனாராம விகாரை அறிவித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதற்கமைய தனுஷ்கவின் சகோதரர் மற்றும் உறவினர்களை ஒட்டாவாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, பிரதிவாதி சட்டத்தரணியான மைக்கேல் ஜோன்ஸ்டன் படுகொலை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “இச்சம்பவத்தின் அருவருப்பான தன்மையால், ஒருவரின் மனநலம் கேள்விக்குறியாகலாம். குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு வருவதற்கான தகுதியை தீர்மானிக்கவும் இது உதவும். மேலும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மனநலக் கோளாறு உள்ளதா இல்லையா என்பதையும் கண்டறிய முடியும்”என்றார்.
இதேவேளை, கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் உள்ள இரத்தக் கறைகளை சுத்தம் செய்யும் பணியில் நேற்று கனேடிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Back to top button