உலகம்

கனடா அரசின் முக்கிய அறிவிப்பு! மகிழ்ச்சியில் மக்கள்!

#france News#

கனடாவில் குறைந்தபட்ச சம்பளம் பெறும் பெடரல் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பளத் தொகை அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனேடிய அரசாங்கம் ஏப்ரல் 1ம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியத்தில் 65 cents அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் மணிக்கு 16.65 கனேடிய டொலர்கள் ஊதியமாக பெறும் ஊழியர்கள் இனி 17.30 டொலர் பெற்றுக்கொள்வார்கள்.

2021ல் இருந்தே குறைந்தபட்ச ஊதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தி வருகிறது. பெடரல் அரசின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, கனேடிய அரசாங்காத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது விமான நிலைய ஊழியர்கள், வங்கி, அஞ்சல்த்துறை, தொலைத்தொடர்பு என பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் பணிபுரியும் மாகாணம் அல்லது பிராந்தியத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் பெடரல் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகமாக இருந்தால், உங்களுக்கு மாகாணம் அல்லது பிராந்தியத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் பொருந்தும்.

பெடரல் நிர்வாகத்தின் குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகமாக வழங்கும் மாகாணம் Yukon என்றே தெரியவந்துள்ளது. இங்கு, 16.77 டொலரில் இருந்து தற்போது 17.59 டொலர் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெடரல் ஊழியர்களுக்கு மணிநேர அடிப்படையில் ஊதியம் வழங்கப்படாவிட்டால், குறைந்தபட்ச ஊதியத்திற்கு சமமான ஊதியத்தை அவர்கள் பெற வேண்டும். Saskatchewan மாகாணத்தில் எதிர்வரும் அக்டோபர் 1ம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் 15 டொலர் என அதிகரிக்கப்பட உள்ளது.


Nova Scotia நிர்வாகம் ஏப்ரல் மாதம் முதல் 15.20 டொலராக வழங்க இருக்கிறது. New Brunswick ஏப்ரல் மாதம் முதல் 15.30 டொலராகவும், Newfoundland and Labrador ஏப்ரல் முதல் 15.60 டொலர் எனவும் Prince Edward Island நிர்வாகம் ஏப்ரல் முதல் மணிக்கு 16 டொலர் எனவும் அதிகரிக்க உள்ளது.

Back to top button