பிரான்ஸ்

பிரான்ஸில் மூதாட்டி ஒருவருக்கு நிகழ்ந்த கொடூரம்!

மூதாட்டி ஒருவரை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவரை Seine-et-Marne மாவட்ட காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Souppes-sur-Loing (Seine-et-Marne) நகரைச் சேர்ந்த 86 வயதுடைய மூதாட்டி ஒருவரே தாக்கப்பட்டுள்ளார்.

மாலை 7.30 மணி அளவில் அவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், அவரை வழிமறித்த இரு கொள்ளையர்கள், தாக்குதலில் ஈடுபட்டனர். அவரை கீழே தள்ளி வீழ்த்தி, அவரிடம் இருந்து €5,000 பணத்தினையும், கைக்கடிகாரம் ஒன்றையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்களையும் Seine-et-Marne மாவட்ட காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Back to top button