தாயகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைதான நபர்!

இலங்கையை விட்டு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் டுபாய் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியின் ஒலிபெருக்கியில் ஹெரோயின் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததது. இதையடுத்து, வாகனத்தை செலுத்தி வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

விசாரணைகள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையையும் வெலிகம பொலிஸார் பெற்றிருந்தனர். சந்தேக நபர் வெலிகம, மிதிகம பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய பிரபல போதைப்பொருள் வியாபாரி என தெரியவந்துள்ளது. சந்தேக நபரை நேற்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த வெலிகம பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Back to top button