பிரான்ஸ்

இல் து பிரான்ஸில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று வியாழக்கிழமை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகலின் பின்னர் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும், 10 மி.மீ மழை பதிவாகும் எனவும் வானிலை அவதானிப்பாளர்களான Météo France அறிவித்துள்ளனர்.

தலைநகர் பரிஸ் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த புயல் இல் து பிரான்சை தவிர மேலும் 11 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

Back to top button