தாயகம்

இலங்கையில் பரிதாபமாக பலியான மூதாட்டி!

#france news#

கொழும்பு-பதுளை பிரதான வீதி பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் இருந்து வீழ்ந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. சம்பவத்தில் பொலன்னறுவை கெமுனுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பொடிமெனிக்கே என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூதாட்டி பஸ்ஸில் ஏறி பின்புற ஆசனம் ஒன்றில் அமர சென்றபோது பின்புற கதவால் வெளியே வீழ்ந்துள்ளார். இதில் காயமடைந்த மூதாட்டி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாங்கொடை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button