பிரான்ஸ்

பிரான்ஸ் கலாச்சார மண்டபத்திற்கு முன் குவிந்த அகதிகள்! விடுக்கப்பட்ட கோரிக்கை!

#france#

பரிசில் உள்ள கலாச்சார மண்டபமான Centquatre-Paris இற்கு முன்பாக நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு நூற்றுக்கணக்கான அகதிகள் ஒன்று கூடினர். மண்டபத்தின் வாசலை அடைத்துக்கொண்டு அவர்கள் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை தடை செய்தனர்.

இதனால் மண்டபத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது. அதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அழைக்கப்பட்டு அகதிகள் வெளியேற்றப்பட்டனர். அதன்போது காவல்துறையினருக்கும் அகதிகளுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அகதிகளை அரசு கண்டுகொள்ளவில்லை எனவும், அவர்களுக்கு போதிய தங்குமிடங்கள் அமைத்துக்கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதேவேளை, இல் து பிரான்சுக்குள் இவ்வருடத்தில் ஒவ்வொரு நாள் இரவிலும் 120,000 வீடற்றவர்களுக்கான தங்குமிடங்கள் அமைத்துக்கொடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Back to top button