பிரான்ஸ்

🔴🇫🇷பிரான்ஸ் பிரதமரின் உறக்கம் இன்றிய வேலை! எச்சரிக்கை விடுத்த வைத்தியர்கள்!

பிரதமர் கேப்ரியல் அத்தால், நாள் ஒன்றில் நான்கு மணிநேரங்கள் மட்டுமே உறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலநலத்தை கண்காணிக்கும் வல்லுனர்கள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேப்ரியல் அத்தால், பிரான்சின் இளம் பிரதமரும் கூட. நாட்டில் நிலவும் பல்வேறு இயற்கை அனர்த்தம் மற்றும் பல்வேறு காரணங்களுக்கான தொடர்ச்சியாக கடமையாற்றிவருகிறார்.

இரவு பகலாக பல பகுதிகளுக்கு பயணிப்பதும், பல சந்திப்புக்க்களில் ஈடுபடுவதுமாக அவரது பயணம் தொடர்கிறது.
இந்நிலையில், அவர் நாள் ஒன்றுக்கு நான்கு மணிநேரம் மாத்திரமே உறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த போதிய உறக்கமின்மை பாரிய உடல் ஆபத்தினை கொண்டுவரும் என மருத்துவர் Dr. Jonathan Taieb எச்சரித்துள்ளார். போதிய உறக்கமின்மை 50 வயதில் பாரிய நோய்த்தாக்கங்களைக் கொண்டுவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button