தாயகம்

இளம் பெண்ணின் உயிரை பறித்த வாகனம்! அதிர்ச்சியில் குடும்பம்!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் உதவி விரிவுரையாளரான 27 வயதான யுவதி லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகில் வீதியைக் கடக்கும்போது லொறி மோதி அவர் உயிரிழந்த நிலையில் யுவதியின் யுவதியின் இறுதிக்கிரிகைகள் இன்று இடம்பெறாவுள்ளது.

சம்பவத்தில் பத்தரமுல்லை, விக்கிரமசிங்கபுர வந்த லக்மினி போகமுவ என்ற 27 வயதுடைய விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வேலைக்குச் செல்வதற்காக பாதசாரி கடவைக்கு அருகில் வீதியின் மறுபுறம் சென்ற போது பத்தரமுல்ல பெலவத்தையிலிருந்து தலவத்துகொட நோக்கிச் சென்ற லொறியின் முன்பகுதியில் மோதி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறுகின்றது.

உயிரிழந்த லக்மினி சுலோத்தம போகமுவா (27) கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியாவார். கொழும்பு பல்கலைக்கழகம், பத்தரமுல்ல கலை பீடத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிய அவர், களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சந்திரசிறி போகமுவவின் ஒரே பிள்ளையாவார்.


கொழும்பு ஆனந்த பாலிகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி விசேட திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கு , 2017 இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமர மொஹொட்டி ஞாபகார்த்த கிண்ணம் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ஷெல்டன் கொடிகார விசேட கிண்ணம் மற்றும் சர்வதேச உறவுகள்.

புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த யுவதியின் இறுதிக் கிரியைகள் இன்று (21) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button