தாயகம்

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த தமிழர் திடீர் மரணம்!

#france news#

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த ஒருவர் தமிழர் திடீர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையல் அவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் ஹரிச்சந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் 84 வயதான மனோரஞ்சன் சிறிகாந்தன், உயிரிழந்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி விடுதியில் தங்கியிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இரவு 10.30 மணியளவில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button