தாயகம்

தமிழர் பகுதியில் பதபதைக்கும் சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த தாய்!

நாவலடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் உயிரிழந்ததுடன், அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (03-03-2024) இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஓட்டமாவடியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தனது மகளை பார்த்துவிட்டு, வெலிகந்த, குடாபொகுன பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு தம்பதினர் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே நாய் பாய்ந்தமையே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்தில் அப்துல் ஹமீத் ஜமீலா என்கிற 53 வயது பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, 56 வயதுடைய பெண்ணின் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Back to top button