தாயகம்

யாழ்ப்பாண இளம் யுவதிக்கு வந்த டவுட்!

நீண்டகாலமாக கைக்கடிகாரம் பாவனை என்பது உலக வாழ் மக்களிடையே உள்ளது. ஒரு காலத்தில் படித்தவர்கள் , மேல் தட்டு மக்களின் ஆடம்பர பொருட்களில் பொன்றாக விளங்கிய கடிகாரம் தற்போது சர்வசாதாரணமாக அனைவரும் வைத்திருக்க கூடிய பொருளாக கைக்கடிகாரம் மாறியுள்ளது. தற்போதைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கைக்கடிகாரம் பாவனைக்கு வந்துள்ளது.

பல்வேறு விலைகளிலும் அழகிய வடிவங்களிலும் கைக்கடிகாரங்கள் கிடைக்கின்றன.
கைக்கடிகாரத்திற்கான தேவை குறைந்து விட்டது ஆனால் தற்போதைய காலத்தில் கைகடிகாரத்தை பெரும்பாலானோர் பாக்ஷனுக்காகவே கட்டிக்கொள்வதாக யாழ் யுவதி ஒருவர் வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது கைக்கடிகாரம் என்பது நேரத்தை பின்பற்றி வாழ்வதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது. நேரம் என்பது நம் வாழ்வில் மிக முக்கியமாகும். ஆனால் தற்போது மொபைல் பாவனை அதிகரிப்பதால் கைக்கடிகாரத்திற்கான தேவை குறைந்து விட்டது என்றே கூறலாம். மொபைலுக்கு வந்ததால் கைக்கடிகாரம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.

ஏனெனில் மொபைலில் நேரத்தையும் பார்க்கலாம் தானே. இளையோர் பலர் ஓடாத கைக்கடிகாரங்களை இப்பொழுது கட்டிதிரிவதாக கூறியுள்ள அந்த யுவதி, இளவயதை தாண்டியவர்கள் மட்டுமே ஓடும் கடிகாரத்தை அதன் தேவை உணர்ந்து கட்டியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Back to top button