ஜோதிடம்

2024ம் ஆண்டு மிதுன ராசியினருக்கு எப்படி இருக்கும்?

காதல் உங்களுக்காக காத்திருக்கிறது

மிதுன ராசிக்கு 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

செல்வம்

2024ஆம் ஆண்டு என்பது தொடக்கத்தில் இருந்தே மிதுனராசிக்காரர்களுக்கு நன்மையை கொடுக்கும் ஆண்டாக விளங்க போகிறது. 9ஆம் இடத்தில் உள்ள சனிபகாவனால் எந்த பிரச்னையும் ஏற்படாது. 10ஆம் இடத்தில் உள்ள ராகு வாய்ப்புகளை உங்களை தேடி துரத்த வைக்கப்போகிறார். 11ஆம் இடத்தில் உள்ள குருபகவானால் போதும், போதும் எனும் அளவுக்கு உங்களுக்கு செல்வம் சேரப்போகிறது.

முன்கூட்டியே திட்டமிட்டால் வெற்றி

இந்த ஆண்டில் உங்களில் நோக்கம் என்ன என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு முதல் நான்கு மாதங்களுக்குள் அதை தொடங்கி விடுங்கள். மே மாதத்தில் 12ஆம் இடத்திற்கு குரு செல்வதால் பின்னர் வாய்ப்பு வந்தாலும் அதை தொடர வாய்ப்பு இல்லாமல் போகலாம். எனவே எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதனை தொடங்குவது நல்லது.

காதல் கைக்கூடும்

குடும்ப வாழ்கையை பொறுத்தவரை அஷ்டம சனியால் சங்கடங்களை சந்தித்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு விடிவுகாலமாக அமையும், குடும்பம் சார்ந்த வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஒரு முடிவுக்கு வரும். வாழ்கையில் அடுத்த கட்ட அத்தியாத்தை நோக்கி செல்லும் பாதை கண்ணுக்கு புலப்படும்.

திருமண முயற்சிகள் கைக்கூடும். இடையில் ப்ரேக் அப் வரை சென்ற காதல் மீண்டும் மலரும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். இடம், வீடு, ஊர், வாகன மாற்றத்தை விரும்பும் மிதுன ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு சரியான ஆண்டாக அமையும்.

’உடல் நல பிரச்னைகள் வந்து போகும்’

மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் கண்கூடாக தெரியும், 4ஆம் இடத்தில் கேது உள்ளதால் தலைவலி உள்ளிட்ட ஒரு வாரகால உடல் பிரச்னைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கியவர்கள் அதனை கட்டும் அமைப்பை ஏற்படுத்தும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு உள்ளது. புதிய கடன் வாங்கினாலும் அதனால் நன்மை ஏற்படும். மிதுனராசிக்கு நல்ல வாய்ப்புகளை தரக்கூடிய நல்ல ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Back to top button