தாயகம்

தாயக தமிழ் இளைஞர்களிடம் புலம்பெயர் தொழிலதிபர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

தலைமைப்பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கான பண்புகளை தமிழ் இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என புலம்பெயர் தொழிலதிபரும் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட இளைஞர்கழக சம்மேளன பொதுச்சபை தெரிவுக்கூட்டம் யாழ்.பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அரசியல் கட்சிகளுக்காக பகடைக்காய்களாய் உங்களை பாவிப்பதற்கு அனுமதி வழங்காதீர்கள் எனவும் அவர் இளைஞர்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

Back to top button