பிரான்ஸ்

கொந்தளிப்பில் பிரான்ஸ் ஜனாதிபதி! அதிர்ச்சி காரணம்!

தமது மனைவி ஆணாக பிறந்தவர் என்று பரவும் கருத்து உண்மைக்கு புறம்பானது மட்டுமின்றி, இட்டுக்கட்டிய கதை என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கொந்தளித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான தாக்குதல்
கல்லூரி ஆசிரியரான Brigitte என்பவரை கடந்த 2007ல் இமானுவல் மேக்ரான் திருமணம் செய்து கொண்டார். Brigitte ஆணாக பிறந்தவர் என்ற பரப்புரை இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இது பெண்களுக்கு எதிரான தாக்குதல் என்றே மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். மேக்ரான் தமக்கு 15 வயதாக இருக்கும் போதே, அப்போது மூன்று பிள்ளைகளுக்கு தாயாரும் அவரது பிரெஞ்சு இலக்கிய ஆசிரியருமான Brigitte உடன் பழகத் தொடங்கினார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சர்வதேச மகளிர் தினத்தில் பேசிய ஜனாதிபதி மேக்ரான், மிக மோசமான விடயம் என்னவென்றால், தவறான தகவலும் ஜோடிக்கப்பட்ட கட்டுக்கதைகளும் வேகமாக பரவுவது தான், அதை மக்களும் நம்புகின்றனர் என்பது தான் என குறிப்பிட்டுள்ளார்.


பரவும் அபாண்டமான கருத்துகள்
நாட்டின் முதல் பெண்மணி ஆணாக பிறந்தவர் என குறிப்பிட்ட பெண்கள் இருவர் அபராதம் விதித்து தண்டிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் மேல்முறையீடு முன்னெடுக்கப்பட்டு, தண்டனை குறைக்கப்பட்டது. மேலும், சாட்சியம் கூற Brigitte-வின் நெருங்கிய உறவினரும் அழைக்கப்பட்டார்.

1980களின் இறுதி வரையில் தாம் அவருடன் பணியாற்றியதாக குறிப்பிட்ட அந்த உறவினர், தாம் உறுதியாக கூற முடியும் Brigitte ஆண் அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் Brigitte-வின் சொந்த மகள் 40 வயதான Tiphaine Auzière கோபத்துடன் விளக்கமளித்திருந்தார். தமது தாயார் தொடர்பில் பரவும் அபாண்டமான கருத்துகள், சமூகத்தின் மோசமான நிலைமையை குறிப்பிடுவதாக தெரிவித்திருந்தார்.

Back to top button