தாயகம்

தமிழர் பிரதேசத்தில் பெரும் சோகம்! கரையொதுங்கிய சடலங்கள்!

அம்பாறையில் கடலில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று (17) முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மாளிகைக்காடு – சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றுப் பிற்பகல் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த நிலையில் மாணவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை
கடலில் இறங்கி படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது மாலை 4.20 மணியளவில் அதில் இருவரைக் கடலலை உள்ளிழுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி கடலில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போன மாணவர்கள் இருவரையும் சம்பவத்தைக் கேள்வியுற்ற நிமிடம் முதல் கடற்றொழிலாளர்களும், பொதுமக்களும் இணைந்து தேடுதலை முன்னடுத்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏனைய 6 மாணவர்களையும் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Back to top button