பிரான்ஸ்

பிரான்ஸில் அதிகரிக்கும் கைதிகள்! புதிய நெருக்கடி!

பிரெஞ்சு சிறைச்சாலைகள் முன்னர் எப்போதும் சந்தித்திராக அதிகளவான கைதிகளுடன், நெருக்கடியை சந்தித்துள்ளன. பெப்ரவரி 1 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, பிரெஞ்சு சிறைச்சாலைகளில் 76,258 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், 3,964 கைதிகளால் இது அதிகமாகும். அதேவேளை, கடந்த ஒருவருடத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 5.5% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது பிரெஞ்சு சிறைச்சாலைகளில் முன்னர் எப்போதும் பதிவாகியிராத அதிகபட்ச தொகையாகும். பிரெஞ்சு சிறைச்சாலைகளின் மொத்த எண்ணிக்கையை விட 123.5% சதவீதமாக கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Back to top button