பிரான்ஸ்

பிரான்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம்! பாதிக்கப்படும் மக்கள்!

SNCF ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து, 150,000 பயணிகள் பாதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து சேவைகளில் பணிபுரியும் கட்டுப்பாட்டாளர்கள் (contrôleurs ) இந்த வார இறுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதையடுத்து TGV உள்ளிட்ட தொடருந்து சேவைகள் பாதியாக குறைக்கப்பட உள்ளன.

மொத்த பயணிகளில் 15% சதவீதமானோர் (150,000 பேர்) தங்களது விடுமுறை பயணத்தை (தொடருந்து சேவைகளுக்காக முன்பதிவு செய்துகொண்டுள்ளோர்) தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவர்களுடைய பயணச்செலவு 100% சதவீதம் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை TGV Inoui, Ouigo மற்றும் Intercités தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.

Back to top button