பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் அதிரடியாக 39 பேர் கைது! வெளிவந்த காரணம்!

நேற்று சனிக்கிழமை மாலை தலைநகர் பரிசில் அதிரடியாக 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள Charonne கல்லறையை முற்றுகையிட்ட தீவிர வலதுசாரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்சில் 1945 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட எழுத்தாளர் மற்றும் செய்தியாளர் Robert Brasillach இற்கு அஞ்சலி செலுத்தவே அவர்கள் அங்கு ஒன்றுகூடியிருந்தார்கள்.

அரசாங்கத்துக்கும் பிரான்ஸ் அரச கட்டமைப்புக்கும் எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் அவர்கள், அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்கள் எனவும், முன்னெச்சரிக்கை காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகொறது.

நேற்று கைது செய்யப்பட்டவர்களில் பலர் முன்னதாக கடந்த நவம்பர் மாதம் கைதாகி விடுதலை செய்யப்பட்டிருந்தவர்கள் எனவும் அறிய முடிகிறது. யூத மதம் மீதான வெறுப்பும் அவர்களிடம் நிறைந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Back to top button